Categories
அரசியல் மாநில செய்திகள்

தேதிக்காக வெய்ட்டிங்…! வி.சி.க, தா.வா,க, கம்யூனிஸ்ட்… திருமா போராட்ட அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது

தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துகிறோம். இடது சாரி கட்சிகளையும் உரிய தேதியை முடிவு செய்து ஒருங்கிணைக்க இருக்கிறோம். NLC அலுவலகம் முன்புதான்  போராட்டம் நடக்கும், செவிமடுக்கிற வரை போராட்டம் தொடரும். ஏற்கனவே இதை கண்டித்து இருக்கிறோம். ஆர்ப்பாட்டங்களில் நடத்தி இருக்கிறோம், NLC நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறோம்.

அடுத்தடுத்து வேலைவாய்ப்புக்கான அழைப்பை வெளியிடுவதற்குள்,  நாங்கள் அதை கவனத்தில் வைத்துக்கொண்டு செய்வோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடிய வகையில், அந்த கோரிக்கை வேறு,  இந்த கோரிக்கை வேறு. புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அங்கு ஏற்கனவே இருக்கின்ற  பணியிடத்தில் நிரப்ப சொல்லவில்லை.  ஒரு 400 பேருக்கு வேலை வேணும். அந்த 400 பேரையும் எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கவில்லை,

நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்துங்கள், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வேலை கொடுக்கலாம். யாரெல்லாம் நிலம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தகுதி நிலம் கொடுப்பவர்களிடம் இருக்காது, ஆனால் நிலம் கொடுப்பவர்களுக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |