இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருக்கிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை சீரடைந்ததும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும்.
இந்தியாவின் மிக முக்கியமான நண்பரை வரவேற்க இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்தையும் மோடி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவு நிலை குறித்தும் பேசி வருகிறார். குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உறவு என்பது வேறு நாடுகள் சம்பந்தப்பட்டதல்ல, பசிபிக் ஓஷன் நாடுகள் மற்றும் இந்தியாவின் பிராந்தியத்திற்கு மிக முக்கியமானது, உலகின் மிக முக்கியமானது என்றும் பிரதமர் மோடி பேசி வருகின்றார்.