Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ரூ. 10 லட்சம் கோடி வாரா கடன்கள் தள்ளுபடி”…. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்…!!!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, வங்கிகளில் உள்ள நிர்வாக இயக்குனர்கள் குழு அளிக்கும் ஒப்புதலின் பேரிலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரிலும் வாரா கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த வாராக்கடன்கள் வங்கிகளின் இருப்பு நிலை ஏட்டை சரி செய்வதற்காகவும், வரி பயனை பெரும் வகையிலும், முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி சொன்ன தகவலின் படி கடந்த 5 நிதி ஆண்டுகளில் 10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாரா கடன்களை வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளது. அதன் பிறகு வார கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவற்றை திரும்ப வசூலிப்பது போன்ற சட்ட நடவடிக்கைகள் தொடரும். மேலும் கடந்த 5 நிதியாண்டுகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி வாரா கடன்கள் உட்பட 6 லட்சத்து 56 ஆயிரத்து 596 கோடி கடன்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |