Categories
தேசிய செய்திகள்

“100 நாட்கள்…. 9 மணி நேரம் தூங்கும் வேலை… “ரூ. 1,00,000 சம்பளம்”..!!

வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது.

மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் இளைஞர்கள், அவர்கள் அளிக்கும் மெத்தையில் தினமும் 9 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு உதவித்தொகையாக 100 நாட்கள் முடிந்தபிறகு ரூ. 1 லட்சம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Image result for sleep

இந்த இன்டர்ன்ஷிப்பின் போது, ​​நிறுவனத்தின் மெத்தையில் தூங்கும் பங்கேற்பாளரின் தூக்க முறை கண்காணிக்கப்படும். ஆனால், இதில் பங்கேற்பதும் பெரிய சவாலான காரியம் தான். ஏனெனில், ஒரு பங்கேற்பாளர் தனது தூக்கத்தின் மீது எவ்வளவு ஈடுபாடு வைத்துள்ளார் என்பதைப் பற்றி நிறுவனத்திற்குப் புரிய வைக்க வேண்டும்.

Image result for sleep

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் சைதன்யா ராமலிங்கே கவுடா கூறுகையில், ” நாட்டின் சிறந்த தூங்குபவர்களை நியமிக்க விரும்புகிறோம். அவர்கள் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக இருக்கவேண்டும்” என்றார். அதில் பணிபுரிய விரும்புபவர்கள் ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பைத் தவிர, ‘ தூங்கும் பணிபுரியும் நபர்களுக்கு சாப்பாட்டிற்குப் பிறகு, சிறிது ஓய்வு எடுக்க நேரம் தர வேண்டும்’ எனப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |