சிகரெட் வாங்க பொடிநடையாக பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரான்சு நாட்டவர்
மலைப்பாதை வழியில் நடந்து சென்றவர் நீரோடை ஒன்றில் தெரியாமல் விழுந்துள்ளார். அதில் நனைந்து மிகவும் குளிர் ஏற்படவே வேறு வழி இல்லாமல் உதவிகேட்டு மீட்புக் குழுவினரை அழைத்துள்ளார். ஹெலிகாப்டரில் வந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டுள்ளது. அதன் பின்னரே உண்மை தெரிய வந்துள்ளது.
ஸ்பெயின் கிராமத்தில் சிகரெட் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் காரை எடுத்துக்கொண்டு வாங்க புறப்பட்டபோது போலீசாரிடம் சிக்கி போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர். எனவே இப்போது பொடிநடையாக நடந்து ஸ்பெயினுக்கு செல்ல முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடு தடையை மீறிய அவரிடம் போலீசார் 120 பவுண்டுகள் அபராதமாக வாங்கியுள்ளார்.