Categories
மாநில செய்திகள்

நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்… வைரலாகும் புகைப்படம்…!!

நேற்று மதுரையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் என்பவருக்கும் தீக்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து 7.30 மணிக்கு 161 பேருடன் அந்த விமானத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. விமானத்தில் சென்ற அனைவருக்கும் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, யாருக்கும் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.

பின்னர் நடுவானில் சென்று உறவினர்கள் மத்தியில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்தது. இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை  தொடர்ந்து திருமணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |