சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக கட்சியினர் தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணமாக சென்று போராட்டம் நடத்தியுள்ளனர்
களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறி சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திமுக கட்சியினரால் நடத்தப்பட்டது.