Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… இடிந்து விழுந்த சுற்று சுவர்… முற்றிலும் சேதமடைந்த ஆட்டோ….!!

மருத்துவக் கல்லூரி விடுதியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ சேதமடைந்து விட்டது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெரிய மிளகுபாறை பகுதியில் இருக்கும் கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் பிசியோதெரபி மாணவர்களுக்கான விடுதியின் சுற்று சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

இதனையடுத்து இடிந்து விழுந்த சுற்று சுவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சஞ்சீவி ராஜா என்பவரின் ஆட்டோ மீது விழுந்து விட்டது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி சஞ்சீவி ராஜாவின் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்து விட்டது.

Categories

Tech |