பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பழைய வீட்டின் சுவரை அவர் சின்னத்தம்பி என்பவரை கொண்டு இடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் 2 வயது குழந்தை ஸ்ரீதேவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் சின்னதம்பி, பூங்கொடி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.