கிரீஸ் நாடு சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை துருக்கி உடனான எல்லையில் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து 2015-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நேர்ந்தது போல் தற்போது அகதிகள் பலரும் மீண்டும் இடம்பெயர வாய்ப்புள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டிற்கு அகதிகள் பலரும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து இடம்பெயர வாய்ப்புள்ளதால் கிரீஸ் நாடு துருக்கி உடனான எல்லையில் சுமார் 40 கிலோமீட்டர் நீளத்தில் பெரிய சுவர் ஒன்றை எழுப்பியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தற்போது குடிநுழைவு கொள்கைகள் கிரீஸில் கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.