Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு புது ரேஷன்கார்டு வேணும்… விண்ணப்பித்த திருநங்கைகள்… நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம்…!!

பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகம் மற்றும் தனி தாசில்தார் அலுவலகங்களில் திருப்பூரில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களுக்கும் நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, கேஸ் இணைப்பு புத்தகம் போன்றவையுடன் வந்து புதிய ரேஷன் கார்டு வழங்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் திருப்பூர் வடக்கு தொகுதி, உடுமலை, அவிநாசி போன்ற தாசில்தார் அலுவலகத்தில் தலா ஒரு திருநங்கை என மொத்தம் 3 பேர் புதிய ரேஷன் கார்டு வழங்குமாறு விண்ணப்பித்தனர். அதோடு முகவரி மாற்றம், பெயர் மாற்றம், போன்ற ஆலோசனைகளையும் அவர்கள் கேட்டு சென்றுள்ளனர். இதைதொடர்ந்து 157 பேர் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி கணேஷ் கூறும்போது, விண்ணப்பிக்கப்பட்ட 160 விண்ணப்பங்களில் 151 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தாகவும், 9 விண்ணப்பங்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |