இருவரும் ஒரே சமயம் ஓய்வு நேரங்களை எடுத்துக் கொண்டு இருவரின் நேரத்தை வீடியோ அழைப்பு, ஸ்கைப், மூலம் செலவழியுங்கள்.
புதிய வேலை வாய்ப்பு, திருமணம், குடியேற்றம்… இப்படிப் பல காரணங்களுக்காக நண்பர்கள் வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இத்தனை காலம் தொடர்ந்த நட்பு, இனி அதே உரிமையுடனும், அன்புடனும் தொடருமா என்ற அச்சம் வர ஆரம்பிக்கும். இந்த நிலையை எதிர்க்கொண்ட பலரும், நட்பில் பல மாற்றங்கள் உண்டாகும் என கூறியுள்ளனர்.
இன்னும் சிலர், தொலைதூரம் சென்று வந்தாலும், மீண்டும் ஒரு முறை பார்க்கையில், எதுவும் மாறவில்லை, ஒருவருக்கொருவரான நட்பு அதே போல உள்ளது என்பார்கள்.
எது எப்படி இருந்தாலும், பிரிந்து தொலை தூரம் செல்லும் நட்பினை இணைத்து வைக்க, இரண்டு நபர்களுமே, அவர்களுக்கான நேரத்தை சிறிது ஒதுக்கினாலே போதும், வருடங்கள் கடந்தாலும், நட்பு மாறாது இருக்கும்.
ஷேரிங் நல்லது:
இருவரும் ஒரே சமயம் ஓய்வு நேரங்களை எடுத்துக் கொண்டு இருவரின் நேரத்தை வீடியோ அழைப்பு, ஸ்கைப், மூலம் செலவழியுங்கள். உணர்ச்சிகளை, சிக்கல்களை, மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.
உங்களுக்குப் பிடித்தவை:
தொலைதூரம் தாண்டி இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை உபயோகித்துக் கொள்ளவேண்டும். வீடியோ அழைப்பில் உள்ள போது, இருவருக்கும் பிடித்த திரைப்படத்தை பார்ப்பது, பிடித்த உணவை சமைப்பது போன்ற அழகான தருணங்களை உருவாக்குவது, மறக்கமுடியாத நினைவுகளாய் மனதில் தங்கும்.
இனிய தருணங்களை கொண்டாடுங்கள்:
வேலை நாட்களிலும், குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வேடிக்கையான புகைப்படங்கள், வீடியோக்களை உங்கள் நண்பருடன் பகிர்வதற்கு தயக்கம் காட்டதீர்கள். நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு என்ன வேண்டும், வாழ்க்கையின் நிலையை கேட்டு அறிந்து ஆறுதலாய் இருக்க மறக்காதீர்கள்.