நடிகை கீர்த்தி சுரேஷ் என் குணாதிசயங்களுக்கு எதிராக நடிக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “குட்லக் சகி” என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் நாகேஷ் குக்குனுர் இயக்கியுள்ளார். சுதிர் சந்திர பத்ரி, ஷ்ராவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட காதல் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியது. கீர்த்தி சுரேஷ் இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த பேட்டியில் ” நமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்குமோ அதை நெருங்கி இருக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய மிகவும் சவுகரியமாக இருக்கும். ஆனால் புதிதாக நமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்காது. என்னுடைய குணாதிசயங்களுக்கு எதிரான கதாபாத்திரங்களில் நான் நடிக்கும்போது சந்தோஷம் கிடைக்கும். இந்த கதாபாத்திரத்தை சவாலாக செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். வாழ்க்கையில் நான் மிகவும் மென்மையானவள். துறையில் அதற்கு விரோதமாக காட்சியளிக்க விரும்புகிறேன். அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளேன்.” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.