அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் பெண்கள் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம்.
பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாகச் சொல்லப் போனால், இரும்புச் சத்து, கால்சியம், புரதம், நார்ச் சத்து, மக்னீசியம், மங்கனீஸ், ஜின்க் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் ஏ, சி, பி, பி12 போன்ற சத்துக்களும் உங்கள் உணவில் நிறைவான அளவு இருக்க வேண்டும்.
இவற்றை நீங்கள் சத்து மாத்திரை சாப்பிட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. இயற்கையாக விளையும் காய், பழம் மற்றும் கீரை வகைகளைச் சரியான முறையில் சமைத்து , அதிலிருந்து சத்துக்களைப் பெற்று கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, சுக பிரசவத்திற்கு ஏற்ற உணவாக அவை இருக்கும்.
அதோடு தினமும் நடைப்பயிற்சி செய்யவேண்டும். தினமும் 1 முதல் 2 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்வதனால் உங்களது உடல் சுகப்பிரசவ வலியினை தாங்குவதற்கான திறனைப் பெறும். அதோடு நீங்கள் எவ்வளவு உடலுக்கு வேலை கொடுக்கின்றீர்களோ அவ்வளவு உங்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.