Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..!!

தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பிரபலஇயக்குனர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

சென்ற வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மேலும் தேசிய விருதிற்க்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு தேவையான நடிகர்கள், நடிகைகள் தற்போது தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Image result for pariyerum perumal chance to act

அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் 25 முதல் 27 வரை நடைபெறக்கூடிய இந்த ஆடிஷனில் கலந்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிப்பில் ஆர்வம் உள்ளோர் “4,தென்றல் நகர், மகாராஜா நகர் போஸ்ட், திருநெல்வேலி [அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை எதிரில்] இந்த முகவரிக்கு சென்று பங்கேற்று கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9176269475 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |