Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  • வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள்.
  • தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும்.
  • உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சயவன்பிராஷ் மருந்தை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட வேண்டும்.
  • சுக்கு, மிளது, திப்பிலி போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் ஒரு சில சொட்டுகளை தினமும் காலை மற்றும் மாலையில் மூக்கில் விட வேண்டும்.
  • நல்லெண்ணெய் அல்லது தேங்காய எண்ணெயை வாயில் போட்டு கொப்பளிக்கலாம். இதை செய்து முடித்ததும் வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |