சொந்தமாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ள்ளது.
2021 ஆம் வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் பலருக்கும் இந்த வருடம் எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்று அல்லது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அப்படி வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டம் ஏதாவது இருந்தால் இதுதான் சரியான வாய்ப்பு. இப்போது வீட்டு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வீடு வாங்க திட்டமிடுபவருக்கு எஸ்பிஐ வங்கி அட்டகாசமான சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது.
இதில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், கூடுதல் கட்டணங்களும், செலவுகளும் தள்ளுபடி என்று சிறப்பு அம்சங்களை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக எஸ்பிஐ வங்கி உள்ளது. வாடிக்கையாளர்களின் சிவில் ஸ்கோருக்கு ஏற்ப எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கிறது. 30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 6.9 சதவீதம் முதல் 30 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு 6.95 சதவீதம் வட்டி தொடங்குகிறது. இதுபோல மெட்ரோ நகரங்களில் 5 கோடி ரூபாய் வரையிலும் கடன்களுக்கு கூடுதல் வட்டி சலுகை கிடைக்கின்றது.
எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ யோனா ஆப் மூலமாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் இந்த வசதிகளுடன் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி சலுகை கிடைக்கும். இந்த வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள சலுகைகளுக்கு கூடுதலாக 0.05% வட்டி சலுகை வழங்கப்படுகிறது. மேலும் வேறு வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அதை எஸ்பிஐ வங்கிக்கு மாற்றிக் கொண்டாலும் கூடுதலாக 0.05% வட்டி சலுகை கிடைக்கிறது. எனவே வேறு வங்கிகளில் அதிக வட்டியில் அவதிப்பட்டு வருபவர்கள் எஸ்பிஐ வங்கிகளுக்கு மாறி அதிக வட்டியால் ஏற்படும் செலவுகளை குறைக்கலாம்.