Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாங்க எப்படி போகுறது… ரொம்ப சிரமமா இருக்கு… சீக்கிரமா வேலைய முடிங்க… பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட தோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சத்திரப்பட்டி சாலை ரயில்வே கேட் வரை உள்ள ரோட்டில் குழிகள் தோன்றியதால் அப்பகுதி முழுவதும் புழுதிகள் நிறைந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள் முழுவதும் குழிதோண்டி இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த நகருக்கு என்று தனியாக மாற்று வழி சாலை கிடையாது என்பதால், வாகனப் போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய வேறு வழியைத் தேர்ந்தெடுப்பது என்பது இயலாத காரியம். எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து புதிய தார் சாலை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |