சில நேரங்களில் அவர்கள் மிகச் சிறந்த நபர்களாக இருப்பர். ஆனால், அவர்களுடன் இந்த ரொமான்ஸ் உறவு மட்டும் நன்றாக வந்திருக்காது.
தலைப்பைப் படித்த உடனேயே சிலர் `ஏன்’ என்று கேட்பீர்கள்? கண்டிப்பாக நீங்கள் கேட்கும் கேள்வி சரியே. இது தனிப்பட்ட விஷயம் தான் என்பது உண்மை. நபருக்கு நபர் இந்த விஷயம் மாறுபடும் என்றும் புரிகிறது. ஆனால், சில நேரங்களில் உங்கள் முன்னாள் காதலர் தெரியாதா ஆளாக வாழ்க்கையில் இருந்து மறைந்து போவதில்லை.
சில நேரங்களில் அவர்கள் மிகச் சிறந்த நபர்களாக இருப்பர். ஆனால், அவர்களுடன் இந்த ரொமான்ஸ் உறவு மட்டும் நன்றாக வந்திருக்காது. அதனால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றிருப்பீர்கள். காதல் முறிவு இந்த விஷயங்களைப் பார்க்காது.
காதல் முறிவு தரும் வலி இந்த எல்லா விஷயங்களையும் நமக்குத் தெரியாமல் செய்துவிடும். ஆனால், காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் கடந்த பின்னர் இந்த நிலைமை பற்றி புரிய ஆரம்பிக்கும். அப்புறம் உட்கார்ந்து சிந்தித்தால், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருப்பீர்கள் என்பது புரியும். ஆனால், காதலர்களாக இருக்க முடியாது என்பதும் தெரியும்.
அதுவும் நல்லது தான். இந்த நிலையில் தான், முன்னாள் காதலரின் நினைவில் இருந்து நீங்கள் அகன்று விட்டீர்கள் என்று அர்த்தம். இந்த நேரத்தில் தான் நீங்கள் முன்னாள் காதலருடன் நண்பராக இருக்கலாம் என்று புரிய ஆரம்பிக்கும்.
சரி எப்படி அந்த நட்பை அணுகுவது..؟ இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
திரும்ப அவருடன் பழகும் போது, அவர் பற்றிய காதல் உணர்வுகள் அனைத்தும் கடந்து விட்டனவா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர் உங்களிடம் வந்து தன் அடுத்த காதல் பற்றி பகிர்ந்தால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். அதைக் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறதா؟ அப்படி என்றால் அவர் மீதான உணர்வுகள் இன்னும் அகலவில்லை என்று அர்த்தம். திரும்பவும் அவரிடம் நண்பராக இருக்க இன்னும் நிறைய காலம் தேவைப்படுகிறது என்று புரிந்து கொண்டு விலகுங்கள்.
ஒரு நண்பரிடம் அணுகுவது போலவே முன்னாள் காதலிரிடம் பேசுங்கள். அவருக்கு உங்களிடம் நண்பராக பழக விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அது அவரின் தேர்வு. அதற்கு மதிப்புக் கொடுத்து விலகுங்கள். அழுத்தம் கொடுக்காதீர்கள்.
பழையபடி கொஞ்சல், கெஞ்சல், நக்கல், உருகல் பேச்சுகளை அறவே தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக மீண்டும் உடலுறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அது நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடும். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
இருவருக்கும் இடையில் மீண்டும் எதாவது உரசல் வருவது போல் தெரிந்தால், பின்வாங்குகள். ஆனால், ஆர்வம் சில நேரங்களில் விடாது. கண்டிப்பாக டெம்ப்ட் ஆகும். ஆனால், அதிலிருந்து மீண்டு வாருங்கள்.