Categories
குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை சமாளிக்க வேணுமா…? கவலைபடாதீங்க… சில யோசனைகள் இதோ..!!

குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பதும், அவர்களை எப்படிக் கையாளுவது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளை சமாளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் சில குழந்தைகள் சில நேரம் நன்றாக இருப்பார்கள். இனிமையாக, பாசமாக இருப்பார்கள். சில சமயம் திடீரென்று பிடிவாதம் பிடிப்பார்கள். அடிக்கடி மரியாதை இல்லாமல் முரட்டுத்தனமாக கோபத்துடன் நடந்து கொள்வார்கள். இதையெல்லாம் பெற்றோர்கள் சமாளித்து நடக்கவேண்டும். உங்களுடைய முயற்சிகளும் சமாதானப் பேச்சுகளும் ஒன்றுமே பயனளிக்காமல் போகும் நேரத்தில் உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும்.

அப்போது குழந்தைகள் மீது அதிக கோபத்தையும், வெறுப்பையும் நீங்கள் காட்டுவீர்கள். அது மேலும் பல பிரச்சனைகளை உருவாகும். குழந்தைகள் உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால்,  அதனை சமாளிக்க நிதானமாக கையாள வேண்டும். குழந்தைகள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். குழந்தையை நோக்கி கத்தினால் அவர்களுக்கு கத்துவார்கள். நீங்கள் அன்புடன் நடந்து கொண்டால் அவர்களும் அன்புடன் நடந்து கொள்வார்கள் . நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என யோசித்து நடந்து கொள்ளுங்கள்.

அவர்களுடைய விருப்பங்களை கேட்டு அவற்றை மதித்து அவர்களை பாசமான முறையில் திருத்த முயற்சி செய்யுங்கள். பல பெற்றோர்கள் பருவ வயதினரை சமாளிக்கும் போது விட்டுக்கொடுத்து போக முடிவெடுக்கிறார்கள். அதனால் அவர்கள் கண்டிப்பதை மிகவும் குறைத்துக் கொள்கிறார்கள். இதனால் காலம் கடந்தபின் அபாயம் ஏற்படும்.  குழந்தையாக இருக்கும் பொழுது அவர்களது தவறுகளை கண்டித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்வது தவறு என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளருவார்கள். தேவைப்பட்ட சூழ்நிலைகளில் குழந்தைகளிடம் விட்டுக் கொடுத்து போங்கள். அதற்காக எந்நேரமும் விட்டுக்கொடுத்து சென்றால் குழந்தைகள் வீம்பு பிடிக்கும் தன்மையை கொண்டு விடுவார்கள். உங்கள் குழந்தைகளிடம் தொடர்ச்சியாக அறிவுரையை சொல்லிக்கொண்டு இருந்தால் உங்கள் குழந்தைகள் உங்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள். நீங்கள் அடிக்கடி அறிவுரை  கூறினால் அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.

Categories

Tech |