Categories
மாநில செய்திகள்

அதிகமாக சம்பாதிக்க வேண்டும்…. கம்பெனிகளின் பேராசையால்…. ஏற்படும் உயிர்பலி…!!

அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற பட்டாசு ஆலைகளின் பேராசை தான் விபத்துகளுக்கும், உயிர் பலிக்கும் முக்கிய காரணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறைந்த உற்பத்தி செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற பட்டாசு ஆலைகளின் பேராசை தான் விபத்துகளுக்கும், உயிர் பலிக்கும் முக்கிய காரணமாக உள்ளது. சிறிய இடத்தில் பட்டாசு ரசாயனங்கள் நடுவே நிறைய பேர் உட்கார்ந்து வேலை செய்வது, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, வெடி ரசாயனங்களை எப்படி கையாள்வது? என்று தொழிலாளர்கள் சரியாக அறியாதது, இவற்றை சரிபார்க்க வேண்டிய அரசு துறைகளில் நிறைந்துள்ள லஞ்ச, ஊழல் ஆகியவைகள் விபத்துகளுக்கு முக்கிய காரணம்.

Categories

Tech |