Categories
சினிமா தமிழ் சினிமா

இவரை கண்டு பிடிக்க வேண்டும்…. ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்….!!!

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபரை கண்டுபிடிக்க ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், அடங்காதே, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர் ஒருவரை வீடியோ எடுத்து அவரது இசை திறமையையும், அவரது வாசிப்பையும், அவர் இருக்கும் நிலைமையையும் பாருங்கள் என மற்றொரு நபர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதை அறிந்த ஜிவி பிரகாஷ் இந்த பதிவை ரீட்விட் செய்து, “இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால் இவரை பாடல் பதிவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |