Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க..!!

முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ்  சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும்.

முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.

வேப்பிலை பொடி புதினா பொடி துளசி பொடி இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு.பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும் கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் செய்தால் பருக்கள் மறையும்.

அருகம்புல் பொடி, குப்பைமேனி இலை பொடி, இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்துபோல் இரவில் போட்டு காலையில் அலம்புங்கள் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்து வந்தால் பருக்கள் மறையும்.

ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்றுப் போடலாம். எலுமிச்சம் இலையை மட்டும் அரைத்து பூசலாம். ஜாதிக்காய், சந்தனம், மிளகு, இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பரு தொல்லை போகும்.

சிலர் வெள்ளைப்பூண்டை மட்டும் அரைத்துப் பூசுவார்கள். தேன் மெழுகும் சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப்பருக்கள் மீது பூசி  வர விரைவில் அவை மறைந்துவிடும் முகம் பொலிவு பெறும்.

Categories

Tech |