தேவையான பொருட்கள்:
துருவிய கோஸ் ஒரு கப்,
வெங்காயம் அரை கப்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்,
சில்லி பவுடர் கால் ஸ்பூன்,
கடலை மாவு ஒரு கப்,
கடலை எண்ணெய் அரை லிட்டர்.
கொத்தமல்லி கறிவேப்பிலை தேவைக்கேற்ப,
தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , கோஸ் , வெங்காயம் , கொத்தமல்லி , கருவேப்பிலை இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , உப்பு , சில்லி பவுடர் இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கோஸ் பக்கோடா ரெடி.