முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் கூறும்போது, தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் ஒளிபரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மண்டேலா படத்தில் தங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை கீழ்தரமாக சித்தரித்து உள்ளதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு போன்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை இந்த படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.