Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

போர் வந்தால் இந்தியா பக்கம் யார் யார்…..!!

இந்தியா-சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு உதவ எந்தெந்த நாடுகள் முன்வரும் என்பது பற்றிய தொகுப்பு

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்பொழுதும் சுமூகமான உறவு இருந்ததில்லை திபேத் ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவி செய்தல், இமாலய அத்துமீறல், வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறல்களில் இந்தியாவிற்கு பிரச்சனை கொடுக்கும் நாடாகவே சீனா அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனையினால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

சில வீரர்களை சீனா கடத்திச் சென்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் மத்தியில் போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு எந்தெந்த நாடுகள் துணை நிற்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு இரண்டு நாட்டின் இடையே போர் ஏற்பட்டால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் சீனாவின் எதிரி நாடுகள் இந்தியாவிற்கு உதவி புரியும்.

சீனாவின் எதிரி நாடுகள் யார்?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா

சீனாவுக்கு ஏராளமான எதிரி நாடுகள் இருந்தாலும் சக்திவாய்ந்த எதிரிகளாக இந்த மூன்று நாடுகள் கருதப்படுகின்றது. எனவே இந்த நாடுகளின் உதவி இந்தியாவுக்கு கிடைப்பது உறுதி.

கொரோனாவால் அதிருப்தி

கொரோனா உருவாகியது சீனாவின் வூஹான் நகரம் என்பதனால் உலக நாடுகள் சீனாவின் மீது கோபம் கொண்டுள்ளது. அதன் நட்பு நாடுகளும் கொரோனா விவகாரத்தினால் சீனாவின் மீது அதிருப்தி கொண்டுள்ளது.

சீனாவின் முதலீடு

சீனா இந்தியாவை சுற்றி இருக்கும் சாதாரண நாடுகளில் பணத்தை முதலீடு செய்து அந்நாடுகளின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. அவை,

  • வங்கதேசம்
  • பாகிஸ்தான்
  • இலங்கை
  • நேபாள்

சீனாவின் நட்பு நாடுகள்

சீனா முதலீடு செய்த பாகிஸ்தான், நேபாள், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளே அந்நாட்டின் நட்பு நாடாகும். ஆனால் சக்திவாய்ந்த நட்பு நாடு என சீனாவிற்கு யாருமில்லை.

இந்தியாவுடன் கூட்டணி

இதுவரை ரஷ்யா இரண்டில் எந்த நாட்டு பக்கம் என்பது தெரிய வரவில்லை. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. தற்போது பிரான்ஸிடமிருந்து பெற்று வருகின்றது. போர் என்று ஒன்று உருவானால் ரஷ்யாவின் கூட்டணி இந்தியாவிற்கு சாதகமாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |