ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்..
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்..
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். காபூல் விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து விமானங்கள் மூலம் தூதர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.. இத்தகைய சூழ்நிலையில் தலிபான்கள் கண்ட்ரோலில் அதாவது முழுமையான கட்டுப்பாட்டில் தலைநகரமான காபூல் வந்துவிட்டது..
நாட்டின் பிற பகுதிகளும் அவருடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும் என சொல்லப்படுகிறது.. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் எந்தவித தீங்கும் வந்துவிடக்கூடாது என அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி கொண்டிருக்கின்றனர்..
அமைதியான முறையில் குடியசுத் தலைவர் அங்கிருந்து ஆட்சியை விட்டுக்கொடுத்து வெளியேறிவிட்டார்.. அடுத்தபடியாக எந்த ஆட்சி அமைக்கிறதோ அது வன்முறை இன்றி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்.. ஐநா சபையில் இது குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இத்தகைய சூழலில் பதட்டம் நிலவுகிறது..உலக நாடுகள் தங்களை கைவிட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனை தெரிவித்தனர்.. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்..