உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை.
https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii Zaluzhnyi, உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் அடுத்த ஆண்டும் கட்டாயமாக நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் தலைநகரை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார்.