Categories
உலக செய்திகள்

உங்களால் தான் இந்த நிலை… போரிஸ் ஜான்சனை சாடிய முன்னாள் நடன அழகி…!!!

இங்கிலாந்தின் முன்னாள் நடன அழகி, இரண்டு வருடங்களாக ஊரடங்கால் என்னை போன்ற ஆயிரத்திற்கும் அதிகமானோர் வர்த்தக பாதிப்புக்குள்ளானதற்கு பிரதமர் என்ன விலை தரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்ப்டன் என்னும் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ரிஹானாப் என்ற முன்னாள் நடன அழகி, ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பென் கோஹனுடனான என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கு காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு, இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிறுவனத்தை தொடங்கினர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், என் குடும்பத்தினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வர்த்தகம் கடந்த இரண்டு வருடங்களில் ஊரடங்கு காரணமாக முடங்கியிருக்கிறது.

இதனால் கடனாளியாகியிருக்கிறோம். எங்களின் தொழில்களை பாதிப்படையச் செய்த போரிஸ் ஜான்சனுக்கு என்ன தண்டனை வழங்கப்படவிருக்கிறது? என்பதை அறிய நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ரிஹானாப், ரஷ்யா போர் தொடுக்க வேண்டும் என்று விருப்பம் கூறியிருந்தார். மேலும், உலக நாடுகள் போரை விரும்புகின்றன. அது லாபம் தரும் என்று அவர்களுக்கு தெரியும். அனைத்தையும் விலையாக கொடுத்து, போர் நடப்பதை உறுதி செய்யட்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |