Categories
மாநில செய்திகள்

வாரான், வாரான்….. மாண்டஸ்க்கு அடுத்து “மொக்க” வரப் போறான்…. இப்பவே பேர வச்சுட்டாங்கய்யா….!!!!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய நிலையில், மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின்படி வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் மாண்டஸ்  என்பதற்கு புதையல் பெட்டி என்பது அர்த்தம். இந்நிலையில் மாண்டஸ் புயலுக்கு பிறகு அரபிக்கடல் அல்லது வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு ‘மொக்க’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் ஏமன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘மொக்கா’ துறைமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மொக்க என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்த நிலையில் அதை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டதால் தமிழகத்தில் அடுத்து வரும் புயலுக்கும் மொக்க என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. மேலும் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகள் சேர்ந்து தலா 13 பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |