Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வார்டனை தாக்கி தப்பியோடிய சிறுவர்கள்…. தாமதமாக கிடைத்த தகவல்…. கோவையில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக 11 சிறுவர்கள் இந்த கோவை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, இவர்களை கண்காணிப்பதற்காக வார்டனும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் இரவு சாப்பாட்டுக்காக சிறுவர்கள் வெளியே விடப்பட்ட சமயத்தில், 6 சிறுவர்கள் வார்டனை தாக்கி அவரை தாங்கள் தங்கியிருந்த அறையில் தள்ளி வெளியே பூட்டியுள்ளனர். அதோடு மற்ற ஐந்து சிறுவர்களையும் மற்றொரு அறையில் பூட்டிவிட்டு 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் வெளியே உள்ள கேட்டின் சாவியை எடுத்துக் கொண்ட சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அறையில் பூட்டப்பட்ட வார்டன் நீண்ட நேரமாக சத்தம் போட்டு, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளார். அதன்பின் அவர் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு சிறுவர்கள் தப்பித்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி இரவு 10 மணிக்கு காவல்துறையினர் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு சிறுவர்கள் தப்பி ஓடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் அவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் அவர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனாலும் அந்த ஆறு சிறுவர்களும் காவல்துறையினரின் கண்ணில் படாமல் தப்பித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |