Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய வார்னர் மீடியா…!!!

வார்னர் மீடியா, ரஷ்ய நாட்டில் தங்களின் புதிய வணிகங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவில் தங்களின் புதிய வணிகங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் என்று வார்னர் மீடியா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேசன் கிலர் தெரிவித்திருப்பதாவது, இந்த  சூழ்நிலையை நாங்கள் உற்று நோக்கி வருகிறோம்.

நிலைமையை கருத்தில் வைத்து, வருங்காலத்தில் வணிகம் குறித்த முடிவுகள் தீர்மானிக்கப்படும். உக்ரைன் மக்களுடன் தான் எங்களது எண்ணங்கள் இருக்கிறது. எங்களது சேனல்களின் ஒளிபரப்பையும், ரஷ்யாவின் அனைத்து புதிய உரிமம், நாடகம் மற்றும் கேம் வெளியீடுகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |