கனடாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க சில முக்கிய நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டுமென்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த 7 நாட்களில் மட்டும் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஓமிக்ரான் பரவல் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருவதையடுத்து அங்கு மிக கடுமையான கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஜீன் டக்லஸ் கனடாவிலுள்ள சில மாநிலங்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது மேற்குறிப்பிட்டுள்ள 2 மாநிலங்களும் மிகக்கடுமையான காலகட்டத்தை கடந்து வருவதை கருத்தில் கொண்டு பிற மாநிலங்கள் ஓமிக்ரானை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 1 அல்லது 2 வாரங்களில் மேல் குறிப்பிட்டுள்ள மாநிலங்களின் நிலைமை மற்றவர்களுக்கும் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.