Categories
உலக செய்திகள்

WARNING: “ஓமிக்ரானோடு ஒழியுமா கொரோனா”…? புதிய உருமாற்றம் கட்டாயம்…. ஷாக் கொடுத்த WHO….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் மிக தீவிரமாக பரவும் தன்மையால் புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.

இந்த கொரோனா தொற்று பல உரு மாற்றங்களை பெற்று உலக நாடுகளுக்கு பரவி வருவது அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சமீபத்தில் கூட தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவரான மரியா வான் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது உலக நாடுகளுக்கு மிகத் தீவிரமாக பரவும் ஓமிக்ரான் புதிய உருமாற்றங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |