Categories
மாநில செய்திகள்

Warning: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000…. தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பாக வந்த சில வதந்திகளை நம்பி, லட்சத்டப் திற்கும் அதிகமான மக்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 5 வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் நிலையில், இதில் பெரும்பாலானவற்றில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில், ஆண்களின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளும் மற்றும் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே, உரிமைத்தொகை வழங்கப்படும் என சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றை நம்பி, இதுவரை லட்சக்கணக்கானோர் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில் இரு கார்டுகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது வதந்தி, இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |