தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியிள் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார் எழுந்துள்ளது. பொதுவாக பல்வேறு மாநிலங்களில் மின்வாரியங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பில்லை டெபாசிட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகின்றன. ஆனால் ஹேக்கர்கள் இதனை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை மக்களை ஏமாற்றும் புதிய யுக்திகளாக மாற்றி உள்ளனர்.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர்கள்வீடுகளில் இரவு 10 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என மாலை மெசேஜ் அனுப்புவதாகவும் அதை தவிர்க்க சில செயலிகளை போனில் நிறுவ சொல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் செய்யும் வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. சமீபத்தில் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 11.5 லட்சம் வரை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.