Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய செயல்கள்… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலத்தூர் வட்டாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |