Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் – சுகாதாரத்துறை…!!

பறவைக்காய்ச்சலானது மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் மூலமாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த பறவை காய்ச்சலானது மனிதர்களுக்கு வரலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் இது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் இதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |