Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை… 24, 25இல் வெளியே செல்வதை தவிர்க்கவும்…!!

வருகின்ற 24, 25 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

நாளை மறுநாள் நிகர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய சம்பந்தபட்ட மாவட்டங்களில் தேவையான கண்காணிப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீட்டில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாமுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில் தேவையான குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின் வசதி, பொது மக்களுக்கு உணவு தயாரிக்கப் போதுமான அளவில் உணவுப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். கடலோர கிராமத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கட்டுமரங்கள், மின்மோட்டார் பொருத்திய போர்ட் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதியில் பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரை முழுமையாக நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். 24ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பெருமழை புயல் எச்சரிக்கை விடப்பட்டு மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பொதுமக்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டு மென்றும், அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தற்போது முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |