ரஷ்ய நாட்டின் அதிபரான புடினின் நெருங்கிய அதிகாரியினுடைய மகள் குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டதால், அதிபருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போரில் தலைமையாக செயல்பட்டு வந்த அலெக்சாண்டர் டுகின் என்ற ராணுவ அதிகாரியுடைய 30 வயது மகள் தர்யா டுகினா, மாஸ்கோ நகரில் வாகன குண்டு வெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டார். இது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி என்றும் அவர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி நேரத்தில் அவர் தன் காரை மாற்றியதால் உயிர் பிழைத்தார். இந்நிலையில், தர்யா கொல்லப்பட்டது ரஷ்ய நாட்டின் அதிகார மையத்தை அதிர செய்துள்ளது. அதிபர் புடினை எதிரிகள் நெருங்கியதால், கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டிருக்கிறது.