வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு.
நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள். 26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான மழை தான் பெய்யும் என்று சொல்லி இருக்காங்க.
நாளை மறுநாள் எங்கெங்க கன மழை ?
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் தினத்தன்று, 25ஆம் தேதி பெய்யும்.
26 ஆம் தேதி எங்கெங்க கன மழை ?
தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என 13 மாவட்டங்களில் கன மழை பெய்தற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க. அதேபோல தமிழக கடலோர பகுதி, குமரி கடல் நோக்கி நகருவதால், குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றிலிருந்து கிறிஸ்துமஸ் நாள் வரைக்கும்… 23ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் அப்படிங்கற எச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளது