உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு, தற்போது மின்துறை கட்டமைப்புகளை குறிவைத்து அதிகளவில் வெடிகுண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். மேலும் குளிர்காலத்தில் தங்களின் ஆற்றல் சாதனங்களை அதிக அளவில் சேதப்படுத்த ரஷ்யா முயல்கிறது.
உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் மூழ்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முக்கியமான நகர்களில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சேதப்படுத்தியுள்ளது. இதில் 15 மின் கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன. தற்போது வரை 70 ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.