ஊராடங்கை மீறினால் 14 நாள் தனிமைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டது. ஐந்தாவது கட்ட நிலையில், தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேல் ஊராடங்கில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதனுடைய பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கபடவில்லை என்றாலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில இடங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த கோரி, பல்வேறு கோரிக்கைகள் மாநில முதல்வருக்கு வந்த வண்ணமிருந்தன.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் வருகின்ற ஜூன் 19 முதல் 30 வரை கடுமையான முறையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழையபடி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். ஏற்படுத்தப்பட்ட தளர்வுகள் அனைத்துமே வாபஸ் பெறப்பட்டுள்ளன. காரணமின்றி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து இ பாஸ் பெறுபவர்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் இருந்தும் வெளியேற முடியும் என்று உத்தரவு இருக்கும் நிலையில், சென்னையிலிருந்து வேறு மாவட்டத்திற்கு அல்லது பிற பகுதிகளுக்கு இ பாஸ் இல்லாமல் செல்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு அவர்கள் சிறைக் கைதிகள் ஆக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.