Categories
லைப் ஸ்டைல்

WARNING: உங்க கிட்னியை பத்திரமா பாத்துக்கோங்க…!!

சிறுநீரகங்களை கவனமாக பார்த்துக்கொண்டால் நாம் ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம்.

நம் உடலின் மிக முக்கிய ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும், கழிவு நீக்கமும்  தான். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும் போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறி விடலாம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக உடலின் கழிவு நீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்குவது சிறுநீரகங்கள்.

இந்நிலையில் இவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அதற்கு நாம் கொடுக்கும் விலையும் கடுமையானதாக இருக்கும். எனவே நம்முடைய சிறுநீரகங்களை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.

கிட்னியை பாதிக்கும் பழக்கங்கள்:

இரவு தூக்கத்தை தவிர்ப்பது (இரவு 11 மணி – 4 மணி வரை) விழித்திருப்பதை இருப்பதை தவிர்க்கவும்.

அதிகம் காப்பி அருந்துவது.

அடிக்கடி தலை வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வது.

மது அருந்துதல், துரித உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் சேர்ப்பது.

விட்டமின் பி, சி மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்து குறைபாடு.

அதிகம் சர்க்கரை உப்பு உணவில் சேர்ப்பது

சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் தள்ளிப்போடுதல்

போதுமான நீர் அருந்தாமல் இருத்தல்

Categories

Tech |