வாட்ஸ் அப்பில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு போலியான தகவல்கள் அல்லது லிங்குகள் வந்தால் அதை கவனமுடன் கையாள வேண்டும். ஏனெனில் தற்போது பல வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் அட்டகாசமான வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், இலவச உபகரணங்கள் என்று போலியான செய்திகளுடன் லிங்குகள் வருகிறது.
இலவச காசோலை, பரிசு சலுகை(Free Paycheck, gift, offer) வழங்குவதாக கூறும் எந்த லிங்கிலும் கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு கிளிக் செய்தால்உங்களின் ஏடிஎம் ரகசிய எண்கள், அந்தரங்க புகைப்படங்கள், நிதி விபரங்கள் எல்லாமே திருடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிக கவனத்துடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.