தமிழகத்துக்கு மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிகையை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபடட்டுள்ளனர்.மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வாகனத்தை பதிவு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தபடுகின்றது.
ரோந்து வாகனங்கள் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படுள்ளது. இது மட்டுமில்லாமல் தலைமறைவாக இருக்க கூடிய ரவுடிகளை கண்டுபிடித்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை_க்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கையின் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி நடைபெறக் கூடிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாத இறுதியில் வேளாங்கண்ணி ஆலயத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.அந்தப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததோடு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாதவாறு காவல்துறையினர் கூடுதலாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.