சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களின் பிரச்சினைகளுக்கு திமுக போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சினைகளை முகஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் போது நேரடியாக விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பது எங்களது முதல் பணி என்று தெரிவித்துள்ளார்.