குஜராத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்துவ உதவிகள் தேவை என ட்விட்டரில் கோரிக்கை விடுத்த ரவிக்குமார் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உதவி அளித்துள்ளார்.
ரவிக்குமார் என்பவர் குஜராத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இவர் தனது ட்விட்டரில், ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை. எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை என முதல்வர் பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த முதல்வர் பழனிசாமி, அந்த அம்மையாருக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து தேவையான உதவுகளும் செய்து தரப்பட்டுள்ளது.
தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்! https://t.co/m8P2jTvjm7 pic.twitter.com/CDr5zAqNCW
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 22, 2020
இந்த புகைப்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள முதல்வர் பழனிசாமி, தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்! என குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.