Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

இலங்கையில் பிறந்தது எனது தவறா ? – முரளிதரன்

இலங்கை அணியின் வீரர் முத்தையா முரளிதரன் 800 பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் ”800” என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகம் பல்வேறு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.  விஜய் சேதுபதியும் இன்னும்  சில நாட்களில் நடிப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக நான் ஈழத்தில் பிறந்து என்னுடைய தவறா ? என்று வார்த்தையை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி அதிகம். அவர்களுக்காக நான் அதிக உதவி செய்திருக்கிறேன். அவை எல்லாம் சொல்லிக் காட்டக்கூடாது. நான் சொல்ல வேண்டிய சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ஐநா தூதராக இருந்த போது 2008 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு அந்த திட்டத்தில்  உணவுகளை கொண்டு சேர்த்துள்ளேன் என அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளது. மேலும் எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் நான் சமாதானப்படுத்த முடியாது.

ஏனென்றால் என்னை பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடுநிலையாளர்களாக… பொதுவாக உள்ளவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் கொடுத்து இருக்கிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |