வடிவேலு ‘வின்னர்’ படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், வடிவேலு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ”வின்னர்”. வடிவேலுவின் நகைச்சுவை தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம். ‘கைப்புள்ள’ என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார்.
இவரின் வித்தியாசமான பாடிலாங்குவேஜினால் இந்தத் திரைப்படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இந்த படத்தில் நகைச்சுவைக்காக வடிவேலு இவ்வாறு நடித்துள்ளதாக ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர். ஆனால், மானஸ்தன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காலில் காயம் ஆனது. அதனால், இவர் வீட்டில் ஓய்வில் இருந்த போது சுந்தர்.சி வின்னர் திரைப்படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார்.
காலில் அடிபட்டு இருப்பதால் எப்படி என்னால் நடிக்க முடியும் என தயங்கி இருக்கிறார் வடிவேலு. அப்போது சுந்தர்.சி, படத்தின் தொடக்கத்திலேயே உங்களுக்கு காலில் அடிபடுவதுபோல் காட்டிவிடலாம். பின்னர், நீங்கள் நொண்டி நடந்தாலும் தவறாக தெரியாது எனக் கூறினார். அதற்கு வடிவேலு ஒப்புக்கொண்டார். இதனை சுந்தர்.சி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் வடிவேலுவை நினைத்து பெருமைப்படுகின்றனர்.